Friday, May 3, 2024
Homeஉலக செய்திகள்ஜப்பானில் அதிகரிக்கும் bf7 வகை வைரஸின் கோர தாண்டவம்..மொத்த உலகத்தையே கதிகலங்க வைக்கும் கொரோனா பரவல்…

ஜப்பானில் அதிகரிக்கும் bf7 வகை வைரஸின் கோர தாண்டவம்..மொத்த உலகத்தையே கதிகலங்க வைக்கும் கொரோனா பரவல்…

டோக்கியோ : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கூட ஜப்பானில் 300 பேர் வரையே மரணம் அடைந்த நிலையில் தற்போது திடீரென, அந்த நாட்டில் ஒரே நாளில் சுமார் 420 பேர் கொரோனா காரணமாக உயர்ந்திருப்பது அந்த நாட்டை கதிகலங்க வைத்திருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.

சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஃப் 7
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியது,.

இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.கடும் கட்டுப்பாடுகள்


தற்போது வரை சீனா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உச்சகட்ட கண்காணிப்பு நிலவி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், தடுப்பூசி பூஸ்டர் செலுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கதிகலங்கும் ஜப்பான்
இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இல்லாத நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு உயிரிழப்புகளும் அதிக அளவில் இருக்கிறது.

சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சடலங்களை எரிக்க முடியாமல் சாலையில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஜப்பானில் மட்டும் நேற்று ஒரே நாளில் 420 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

420 பேர் பலி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு மிக உச்சத்தில் இருந்தபோது கூட ஜப்பானில் ஒரு நாளைக்கு 300 பேர் வரை மட்டுமே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென பலி எண்ணிக்கை அதிகரித்து இருப்பது அந்நாட்டை கதி கலங்க வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தீவிர நுரையீரல் பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியாமல் அந்நாட்டு அதிகாரிகள் குழம்பிப் போயிருக்கின்றனர். சீனாவில் மக்கள் போராட்டம் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது .

என்ன காரணம்?
கொரோனா பிஎஃப் 7 ஜப்பானில் அதிகளவு பரவியதால் பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படும் என தென்கொரியா மலேசியா இந்தியா இத்தாலி உள்ள நாடுகள் அறிவித்திருக்கின்றன இந்த நிலையில் ஜப்பானிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது வரும் நாட்களில் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments