Saturday, April 27, 2024
Homeஅரசியல்செய்திஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியா டுடே’ ஆங்கில இதழுக்கு அளித்துக்கு அளித்த ஜெயலலிதா ஆட்சி செய்த முதல் 6 ஆண்டுகள் குறித்து, அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த 4 ஆண்டுகள் குறித்து விமர்சித்து இருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சி மட்டுமே தங்கள் நோக்கம் இல்லை என்றும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியே எங்கள் குறிக்கோள் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதுபோல் அரசின் திட்டங்கள், திராவிட மாடல், கட்சிப் பணிகள் என பல விசயங்கள் குறித்து இந்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். அவரிடம் எழுப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் அளித்த பதில்களை பார்ப்போம்.

சவாலான காலக்கட்டம்

கேள்வி: 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது முக்கியத்துவமாக முன்னுரிமை அளிக்க வேண்டியது எதுவாக இருந்தன; அவைகளை அமல் படுத்துவதில் உங்களுக்கு எது சவாலாக இருந்தது? மு.க.ஸ்டாலின்: ஒரு சவாலான காலகட்டத்தில் நான் முதலமைச்சராகப் பதவி ஏற்றேன். அழிவை ஏற்படுத்தத்தக்க கடும் நோய் பரவத் தொடங்கி இருந்தது. அதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படத் தொடங்கினோம். நாங்கள் பதவி ஏற்றுக்கொண்ட உடன், அனைத்து அமைச்சர்களும் கொரோனா கட்டுப்படுத்தும் அமைச்சர்களாக மாறிவிட்டிருக்கிறோம்.

கொரோனா பாதிப்பு

கோவிட் – 19 நோயை கட்டுப்படுத்த முழு அடைப்பே முக்கியமான ஒன்றாக இருந்த போதிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட முனைந்தோம். இரண்டு கட்டமாக ரூபாய் 4 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு வருக்கும் வழங்கினோம். அத்துடன் 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா நிவாரணமாக வழங்கினோம்.

பெரு மழை வெள்ளாம் ‘இல்லம் தேடி கல்வி’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். அதைத் தொடர்ந்து கடும் மழை பெய்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பாலும், நெருக்கடிக்கான மேலாண்மையாலும் மழை வெள்ளப் பிரச்சினையை திறமையோடு சமாளித்தோம்.

ஜெயலலிதா ஆட்சி மோசம்

நாங்கள் சந்தித்த இயற்கை இடர்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், அ.தி. மு.க. ஆட்சியில் (2011-2021) மனிதர் களால் உருவாக்கப்பட்ட பேரிடர்களை யும் சந்திக்க வேண்டி இருந்தது. முதல் ஆறு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி மோசமாக இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகால ஆட்சி மிகவும் மோசமாக இருந்தது. நிர்வாகம் என்பதே நடைபெற வில்லை. அமைச்சர்களிடையே லஞ்சம் தலை விரித்தாடியது. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

பொருளாதாரம் ஆலோசனைக்குழு அப்படிப்பட்ட நிலையில் நான் ஆட்சிக்கு வந்தேன். அ.தி.மு.க. ஆட்சியினரால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநில பொருளாதாரத்தை மீட்க, நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்ளோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரைக் கொண்ட பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தினோம்.

3 வது இடத்துக்கு முன்னேற்றம்

பின்னர் வர்த்தகத்தில். நாட்டின் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறினோம். தொடர்ந்து சாதனையாளர்களாக உச்சநிலையைத் தொட்டோம். வளர்ச்சியைப் பொறுத்த வரையில் தொழிற்துறை வேகவேகமாக செயல்பட் டது. நான் பதவிக்கு வந்தவுடன் 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் கிடைத்துள்ளது.

திராவிட மாடல் கொள்கை!

கேள்வி: 2030ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதா ரத்தை எட்ட வேண்டும் என்பதற்கான உங்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற தாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சிக்கான தமிழ்நாட்டின் மாடல் எதுவாக இருக்கும்? மு.க.ஸ்டாலின்: எங்களின் குறிக்கோள் 2030ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதால், அதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இருந்தபோதும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதா, வளர்ச்சியின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

ஒட்டுமொத்த வளர்ச்சி

நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, வளர்ச்சிக்கான திராவிட மாடல் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி தருவதாக அமைய வேண்டும் என்பதைத்தான். வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டும் எங்கள் குறிக்கோள் அல்ல. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி – அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கேற்ப எங்களின் கொள்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நான் முதல்வன் திட்டம்

அண்மையில் துவக்கப்பட்டுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற திறன் வாய்ந்த இளைஞர்களை கண்டறிந்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் சக்தியை அறிவார்ந்த சக்தியாக மாற்ற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்புபடுத்த விரும்புகிறோம். அத்துடன் மகளிர், மாற்றுத் திறனாளிகள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த விரும்புகிறோம். இதுதான் திராவிட மாடலின் பிரத்யேகக் கொள்கை.” என்று தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments