Thursday, May 2, 2024
Homeஇந்திய செய்திகள்டெஸ்டில் அதிக சிக்சர்கள்… தோனி, சச்சின் சாதனைகளை முறியடித்த நியூசிலாந்து பவுலர்..

டெஸ்டில் அதிக சிக்சர்கள்… தோனி, சச்சின் சாதனைகளை முறியடித்த நியூசிலாந்து பவுலர்..

டெஸ்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களில், தோனி, சச்சின் சாதனைகளை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுத்தீ முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டிம் சவுத்தீ. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தற்போது 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸின் 2ஆவது நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய பந்தை பேட்டிங் செய்து கொண்டிருந்த டிம் சவுத்தீ சிக்சருக்கு பறக்க விட்டார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது 78 ஆவது சிக்சரை சவுத்தீ பதிவு செய்தார். இதே எண்ணிக்கையிலான சிக்சர்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். டிம் சவுத்தீ தோனியின் சாதனையை நேற்று சமன் செய்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.

இன்று 3ஆவதுநாள் ஆட்டத்தின்போது மேலும் 4 சிக்சர்களை சவுத்தி அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் சவுத்தி அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 78 சிக்சர்களும், சச்சின் 69 சிக்சர்களும், கபில் தேவ் 61 சிக்சர்களும், கேப்டன் ரோஹித் சர்மா 68 சிக்சர்களும் அடித்துள்ளனர். இதன் அடிப்படையில் இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் டிம் சவுத்தி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments