Sunday, May 5, 2024
Homeஇலங்கை செய்திகள்தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம்; மக்கள் விசனம்!

தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம்; மக்கள் விசனம்!

தனியார் பேரூந்துகளில் பயணகட்டணகள் அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்டதிற்குட்பட்ட தனியார் பேருந்துகளில் இவ்வாறு கட்டுப்பாடின்றி நபர்களுக்கு ஏற்ப ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து கட்டணங்களும் அதிகரித்திருந்தன. ஆனாலும் அதற்கும் அதிகமாக வசூலிக்கப்படுவாதாக பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பேரூந்துகள் நிரம்பிவழிகின்றன அதையும் பொறுத்துக்கொண்டு பயணிக்கின்றனர், அதேநேரம் கட்டணச்சுமையும் துரத்துகின்றது.

வெளிமாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளில் பயணப்பற்றுச்சீட்டு பெரும்பாலும் வழங்கப்படுகிறது. ஆனால் மாவட்டத்திற்க்கு இடையில் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இடையிடையே பற்றுச்சீட்டு நடைமுறைக்கு வரும், வந்த சிலநாளில் காணாமல் போய்விடும் ஆகக்குறைந்து முன்பு கட்டணவிபரங்களை காட்சிப்படுத்தினர் தற்பொழுது அதுவும் இல்லை.

பாவனையாளர் பாதுகாப்பு சட்டங்கள் பெருந்தொற்று மற்றும் இவ்வாறான நெருக்கடி காலங்களில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.

அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாடு தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினர் ஆங்காங்கே ஒரு சில கடைகளை பார்வையிடுவது வழக்கிடுவதோடு நின்றுவிடுகின்றனர், பெரும்பாலும் சாமானியர்கள் அதிக விலைகொடுத்தே பொருட்களை உள்ளூர்களில் வாங்குகின்றனர், இது போக்குவரத்துக்கும் பொருந்துகிறது.- என மக்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments