Saturday, May 18, 2024
Homeஅரசியல்செய்திதிரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இன்று மாரடைப்பால் காலமானார் !!!!

திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இன்று மாரடைப்பால் காலமானார் !!!!

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா என்பது குறிப்பிடத்தக்கது. திருமகன் ஈவெராவின் திடீர் மரணம் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்முறையாக களமிறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதையடுத்து தொகுதிப் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர் சட்டமன்ற நிகழ்வுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வந்தார். 46 வயதே ஆகும் இவர் சென்னையிலிருந்து நேற்று முன் தினம் ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.

மூச்சுத்திணறல் இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருமகன் ஈவெரா உயிரிழந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவருக்கு பூர்னிமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சற்று கடுகடுவென பேசக்கூடியவராக இருப்பினும் கூட திருமகன் ஈவெரா எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் அன்பொழுக பேசக்கூடியவர்.

காங்கிரஸார் அதிர்ச்சி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் திடீர் மரணத்தால் காங்கிரஸ் கட்சியினர் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியினர் அலை அலையாய் திரண்டு வருகின்றனர். மகனின் இறப்புச் செய்தியை அறிந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் துடிதுடித்து போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திருமகன் ஈவெராவின் மரணத்தால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

டெல்லிக்கு தகவல் தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெராவின் மரணச் செய்தியை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், ராகுல்காந்திக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரியப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments