Thursday, May 16, 2024
Homeஅரசியல்செய்திதி.மு.க இல்லையெனில் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு தயார் …ராகுலின் கூட்டணி குறித்து அழைப்புக்கு கமல் பதில்...

தி.மு.க இல்லையெனில் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு தயார் …ராகுலின் கூட்டணி குறித்து அழைப்புக்கு கமல் பதில் .

சென்னை: தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.. ராகுல்காந்திக்கு ஆதரவை தெரிவிக்க, நேரடியாகவே கிளம்பி போய் ஆதரவை தந்துள்ள நிலையில், கமலின் அரசியல் கணக்கும், வியூகமும் பல கட்சிகளை குழப்பியடித்து கொண்டிருக்கிறது.. கமல் ஏன் டெல்லிக்கு சென்றார்? அங்கு என்ன நடந்தது? என்பது குறித்த சில முக்கிய தகவல்களும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

சமீபநாட்களாகவே கமல்ஹாசனின் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் இணைய போவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

திமுக கூட்டணி தற்சமயம் வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது..

கணை 1
அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. எனவே, எப்படியாவது கமலை சமாதானம் செய்து, திமுக கூட்டணிக்குள் அழைத்து வர வேண்டும் என்ற அசைண்மென்ட் உதயநிதிக்கு தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டன.. ஒருகட்டத்தில் சீட் மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்களும் வெளியாக ஆரம்பித்தன.

கணை 2
குறிப்பாக, 1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்ய திமுக முடிவெடுத்துள்ளதாகவும், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே கமலையும் களமிறக்கலாம், அதிலும் ராமநாதபுரம் தொகுதியை கமலுக்கு ஒதுக்க திமுக விரும்புவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. அதுமட்டுமல்ல, தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுகிறார் என்றும், இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்பட்டன. ஆனால், இவைகள் எதுவுமே இந்த நிமிஷம்வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது வேறு விஷயம்.

கணை 3
இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுல்காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தந்து, நேரடியாகவே அதில் பங்கேற்க போவதாகவும் கமல் அறிவிப்பு வெளியிட்டார்.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால், கமலும், திமுக கூட்டணியிலேயே பயணிப்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.. திமுகவுடன், கூட்டணி வைக்க கமல் விரும்புவதாக செய்திகள் வந்தநிலையில், இந்த யாத்திரை நிகழ்வு, திமுக + கமல் + காங்கிரஸ் கூட்டணியை உறுதிசெய்வது போல எடுத்துக் கொள்ளப்பட்டது.. ஆனால், காங்கிரசுடன் கமல் கூட்டணி வைக்கிறாரா? இதற்கு என்ன காரணம் என்று நாம் மய்ய நிர்வாகிகளிடம் 2 நாட்களுக்கு முன்பு பேசியிருந்தோம்.

தாமரை 123
அவர்கள் நம்முடன் பேசும்போது, ‘நாடாளுமன்ற தேர்தலாக இருப்பதால், தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள கமல் விரும்புகிறார்.. அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் நம்புகிறார்.. கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அதேபோல, கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று அக்கட்சி தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்று தங்கள் அனுமானங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ப்ளான் A
காங்கிரசுடன் கூட்டணி வைக்க இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், கூட்டணி தலைமையான திமுகவை விட்டுவிட்டு, ஸ்ட்டிரைட்டாக கமல் ஏன் காங்கிரஸ் கட்சியுடன்நேரடியாக ஆதரவு தருகிறார் என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளன.. மேலும், திமுக தரப்பு குறித்து இதுவரை கமல் ஆதரவாகவும் பேசவில்லை, எதிராகவும் கருத்து கூறாமல் உள்ளதால், இந்த குழப்பம் மேலும் அதிகரித்து கொண்டே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த குழப்பத்திற்கெல்லாம் ஒரு விடை கிடைத்துள்ளது.. கமல் ஏன் திமுகவை விட்டுவிட்டு, ராகுலுக்கு ஆதரவு தந்தார் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.

ப்ளான் B
ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, அவர் நடத்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.. இந்த யாத்திரைக்கு பிறகு, ராகுலும் கமலும் தனிப்பட்ட முறையில் சந்தித்து விவாதித்தார்களாம்.. அந்த சந்திப்பில், ‘காங்கிரஸ் கூட்டணிக்குள் நீங்கள் வரவேண்டும்’ என்று கமலிடம் ராகுல் கோரிக்கை வைத்திருக்கிறார்… அதை ஆமோதித்த கமல்ஹாசன், ‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா?’ என்று கேட்டிருக்கிறார்..

அதற்கு ராகுல், ‘திமுக அலையன்சில் இருந்து விலகும் யோசனை நமக்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலை திமுக உருவாக்கும் என்று எனக்கு சந்தேகம்’ என்றாராம். அதற்கு கமல், ‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில், நான் எப்படி உங்கள் கூட்டணிக்கு வரமுடியும்? ‘ என்று கேட்க, ‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கேற்ப திமுகவிடம் பேசுவோம்’ என்று சொல்ல, ‘காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால், உங்களுடன் கைக்கோர்க்க தயார். மற்றதெனில் நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்’ என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார் கமல்.

இதனையடுத்து, திமுக கூட்டணியில் நடக்கும் சில ரகசியங்கள், காங்கிரசுக்கு அதிமுக வைக்கும் ஆஃபர் என பல விஷயங்களை கமலிடம் பகிர்ந்து கொண்டாராம் ராகுல்.. ஆக, திமுக கூட்டணி என்றால், கமலுக்கு சற்று கஷ்டம்தான் போல.. எனினும் கமலுக்கான இரண்டரை சதவீத வாக்கு வங்கியை அறுவடை செய்ய போவது யார் என்றும் தெரியவில்லை.. ஒருவேளை, காங்கிரஸ் தரப்புடன் கூட்டணியில் இணைந்தால், ஊழலுக்கு எதிரான விஷயங்களில், திமுகவை கமல் நேரடியாகவே விமர்சிப்பாரா? என்பதும் சந்தேகம்தான்… என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments