Friday, May 3, 2024
Homeஉலக செய்திகள்துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. தொடரும் சோகம்..

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. தொடரும் சோகம்..

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்தது. அதில் இது வரை 50,000 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் துருக்கி மத்திய பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை கண்டுள்ளனர். இதுவரை வெளிவந்த தகவலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில் துருக்கி பகுதியில் நிலைகொண்டுள்ள தட்டுகளால் மீண்டும் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுமார் 5.2 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட 1.6 லட்சம் கட்டங்கள் சேதமடைந்து பாதிப்புகளைக் கண்டுள்ளது.துருக்கி அரசு அளித்த தகவலின் படி, சுமார் 8.65 லட்சம் பேர் கூடாரங்களிலும், 23,500 பேர் கண்டெய்னர் வீடுகளிலும், 3.76 லட்சம் பேர் டார்மெட்டரி அல்லது பொது வசிப்பிடங்களிலும் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர். எனவே, சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகத் துருக்கி அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நிலநடுக்கத்தை எதிர்கொள்ளுமாறு இல்லாத கட்டிட அமைப்பே இந்த அளவிற்குச் சேதம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரும் பணித் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments