Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்தேசிய பாதுகாப்பு சபை தொடர்பான புதிய தீர்மானம்.

தேசிய பாதுகாப்பு சபை தொடர்பான புதிய தீர்மானம்.

1999 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும்,
மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர், சர்வதேச, பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்ற அடிப்படை நிறைவேற்று நிறுவனமாக இயங்குகின்றது.

2023.01.12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபைக்கு நியதிச்சட்ட முறையுடனும்;, மற்றும் தெளிவான கட்டமைப்புடன் கூடியதாக தாபிக்க வேண்டிய தேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய பாதுகாப்பு சபை பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம்
சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments