Thursday, May 2, 2024
Homeஇந்திய செய்திகள்தொடர்ந்து உச்சம் காணும் தங்க விலை …தங்கம் வாங்க சரியான நேரம் எது ?

தொடர்ந்து உச்சம் காணும் தங்க விலை …தங்கம் வாங்க சரியான நேரம் எது ?

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 9 மாத உச்சத்திலேயே காணப்படுகிறது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 54,000 ரூபாய்க்கு மேலாக முடிவடைந்துள்ளது. இதே சர்வதேச சந்தையில் 1792 டாலர் என்ற லெவலிலும் காணப்பட்டது.

இது மீடியம் டெர்மில் 10 கிராமுக்கு 55,500 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சப்போர்ட் லெவல் 53,200 – 52,900 ரூபாயினை எட்டலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் விலை குறியீடானது

நுகர்வோர் விலை குறியீடானது நவம்பர் மாதத்தில் 7.1% ஆக குறைந்தது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7.7% ஆக இருந்தது. பணவீக்கம் என்பது சற்று தளர்ந்து காணப்பட்டாலும், அமெரிக்க மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற போக்கே இருந்து வருகின்றது. எனினும் முந்தைய கூட்டங்களில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், கடந்த அமர்வில் 50 அடிப்படை புள்ளிகளே அதிகரித்தது.

வட்டி அதிகரிப்பு 2023-ம் இந்த போக்கு தொடரலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது. அமெரிக்க மத்திய வங்கினை தொடர்ந்து ஐரோப்பாவின் மத்திய வங்கி, பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கி என பலவும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன. இனியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை ஏற்றம் காணலாம் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இது இனியும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளும் வளர்ச்சியில் சரிவினைக் கண்டு வருகின்றன. இது மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை ஏற்றம் காண காரணமாக அமையலாம்.

தங்கத்திற்கு ஆதரவு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், டாலரின் மதிப்பும் உச்சம் கண்டு வருகின்றது. எனினும் பணவீக்கமும் முழுமையாக சரிவடையவில்லை. அமெரிக்காவின் இலக்கினை எட்ட இது சிறிது காலம் எடுக்கும் எனலாம். ஆக அதுவரையில் தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நிலைப்பாடு சீனாவில் தற்போது நிலவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது. இதன் காரணமாக சந்தையில் என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

விலை அடுத்த லெவல் தங்கம் விலையானது 55,000 ரூபாயினை தாண்டில், இது மேற்கொண்டு 55,500 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரின் 1815 டாலர்களை உடைத்தால் இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களில் 1840 டாலர்களை எட்டலாம். சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும்போது, இது இந்திய சந்தையிலும் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்

தங்கம் விலை என்னவாகும்? அடுத்த ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலையில் தங்கம் விலையானது சைடு வேயாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அதிகரித்து வரும் அரசியல் பதற்றமானது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments