Friday, May 3, 2024
Homeஇந்திய செய்திகள்தொழிற்சாலைகளிலும் பிளாஸ்டிக் தடை: மாசுக்கட்டுப்பாட்டு குழு நடவடிக்கை

தொழிற்சாலைகளிலும் பிளாஸ்டிக் தடை: மாசுக்கட்டுப்பாட்டு குழு நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. முதற்கட்டமாக வழிபாட்டு தலங்களில் அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தற்போது தொழிற்சாலைகளிலும் அமல்படுத்தப்படுகிறது.

இதனையடுத்து தொழிற்சாலைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலையாக இருக்க பின்பற்ற வேண்டிய நிலையான செயலாக்க நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ்வழிகாட்டுதலின்படி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் மற்றும் அதற்கு மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து ஊழியர்களுக்கும் காட்சி ஊடகம் முலம் நடத்த வேண்டும்.

அனைத்து ஊழியர்களும் தொழிற்சாலை வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கக்கூடாது என்றுகொள்முதல் பிரிவுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், வாங்கிய ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் ரசீதை செட்டில் செய்யக்கூடாது.

தொழிற்சாலையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைநீக்க ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.

அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களைத் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.

காவலாளிகள் எந்த ஒரு ஊழியரையும் தொழிற்சாலைக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

தொழிற்சாலையின் நுழைவாயிலில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் ஏற்பாடு செய்யும் கூட்டம் மற்றும் விழாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும். அதற்கு பதிலான மாற்று பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments