Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்நாடாளுமன்றத்தில் நாளாந்தம் செலவிடப்படும் 90 இலட்சம் ரூபா! வெளியான காரணம்.

நாடாளுமன்றத்தில் நாளாந்தம் செலவிடப்படும் 90 இலட்சம் ரூபா! வெளியான காரணம்.

மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் உணவுக்கான விலை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் மாதாந்தம் உணவுக்காக சுமார் 90 இலட்சம் செலவிடப்பட்டதாகவும் அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொகை அதன் ஊழியர்களின் உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்படுவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் நாடாளுமன்றம் கூடும் நாட்களில் மட்டுமே உணவை எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் இது ஒரு மாதத்தில் 8 நாட்கள் ஆகும். மேலும் சில எம்.பி.க்கள் பார்லிமென்டின் டைனிங் ஹாலில் சாப்பிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் நாடாளுமன்ற ஊழியர்கள் மாதம் முழுவதும் (அரசு வேலை நாட்களில்) சலுகை விலையில் நாடாளுமன்றத்தில் இருந்து உணவை எடுத்துச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் விரயமாக்கப்படுவதும் அதிகளவில் காணப்படுவதாகவும் உணவுப் பொருட்களின் கசிவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்ற ஊழியர்களில் கிட்டத்தட்ட 2000 பேர் உள்ளனர்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் உணவுக்கான செலவுகளை அமைச்சர்களின் உணவு செலவு என்று குறிப்பிடுவது தவறானது என்று எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் உணவுக்கான விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments