Tuesday, April 30, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்: எம்.ஏ.சுமந்திரன்.

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்: எம்.ஏ.சுமந்திரன்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப் பிரச்சனைக்கான தீர்வு என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு

இப்பொழுது மூடு விழா நடத்தப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து  75 வருடங்கள், அதற்கு முன்னர்  25வருடங்களாக சுதந்திரத்துக்கான போராட்டம் நடைபெற்ற பொழுது இலங்கை தீவில் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று முன்னணியிலே நின்று போராடிய பல தலைவர்களில் தமிழ் தலைவர்களும் இருக்கின்றனர்.

அனைத்து தலைவர்களும் சேர்ந்து தான் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இப்படியாகத்தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆனால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. எண்ணிக்கையிலே சிறுபான்மை இனத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.

ஏனென்றால் ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சிதான் நடைபெற்றது.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு நாடு இருக்கின்ற சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

மக்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் சிங்கள இளைஞர்கள் போராடினார்கள்.

நாட்டுக்கு சுதந்திர தினம் என்ற போர்வையிலே வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு நாடு வங்குரோத்து ஆகியிருக்கிறது, கடனாளியாக இருக்கின்றது. கடனை திருப்பிக் கொடுக்க முடியாத ஒரு நாடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் அல்ல. ஆகையினாலே 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம்.

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை, எண்ணிக்கையிலே சிறுபான்மையாக இருக்கிறவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.

சிங்கள மக்களுக்கு கிடைத்த அரசியல் சுதந்திரத்தை பயன்படுத்தி அவர்களுக்கே சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள்.

நாட்டிலே எவருக்கும் சுதந்திரம் இல்லை என்ற சூழ்நிலையிலே,

75 ஆவது சுதந்திர தினம் ஒரு வெற்று வெறிதான சுதந்திர நிகழ்ச்சி அதனை நாட்டு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் கூறுகின்றோம்.

இதற்கு அடையாளமாக வருகின்ற மாதம் மாசி மாதம் 04திகதி மட்டக்களப்பில் நாங்கள் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருக்கின்றோம்.

தமிழர்களுக்கு இருள்நாள் பெப்ரவரி நான்காம் திகதி என்ற கருப்பொருளில் இலங்கை தமிழருகட்சி போராட்டத்தை நடத்தும்,

என யாழ்ப்பாணம் சாவகச்சேரி கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம் எ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments