Wednesday, May 8, 2024
Homeஇலங்கை செய்திகள்நாளை முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

நாளை முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

12.5 கிலோ கிராம் வீட்டு சிலிண்டரின் விலை சுமார் 1000 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நாளை (ஏப்ரல் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என்றார்.

நிறுவனத்தின் வரலாற்றில் Litro Gas இன் அதிகூடிய விலை திருத்தம் இதுவாகும் என திரு பீரிஸ் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாவின் வலுவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகள் கணிசமான விலை குறைப்புக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments