Saturday, May 4, 2024
Homeஅரசியல்செய்திநிலத்தின் அடியில் தோண்டி எடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்செர் ! திருவாரூரில் எதிர் பாராமல் நடந்த அதிர்ச்சி...

நிலத்தின் அடியில் தோண்டி எடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்செர் ! திருவாரூரில் எதிர் பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

திருவள்ளூர்: திருவள்ளூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள், தரிசு காட்டில் கண்டுபிடித்த பொருளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


இந்தியா முழுக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் கீழ் பலரும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றர். கொரோனா சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பலரும் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் பல மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவள்ளூரில் 100 நாள் திட்டத்தில் திடீரென பரபர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாளந்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் காப்புக்காடு வளர்ப்பு திட்டத்திற்காக நிலத்தைச் சமம் செய்யும் பணி நடைபெற்றது.

அதாவது சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர், முதலில் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் பூமிக்கு அடியில் மேலும் இது போன்ற பேரழிவு ஆயுதங்கள் ஏதேனும் புதை கொண்டு உள்ளதா? எனச் சோதனை நடத்தி வருகின்றனர்..

மேலும் போரின் போது ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு காலாவதியான ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏதேனும் இரும்பு உருக்கு ஆலைகளுக்குக் கொண்டுவரப்பட்ட போது, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் அதைக் கொண்டு வந்து பூமியில் புதைத்து விட்டுச் சென்றனரா? என்று விசாரித்து வருகின்றனர். அல்லது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த யாரேனும் நாச வேலையில் ஈடுபட இப்படியொரு செயலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். ஊரக வளர்ச்சி திட்டப் பணியின் போது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதற்கு முன் செங்கல் பட்டில் நடந்த இது போன்ற சம்பவம்

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த பகுதியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் மலைப் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வந்தது. அங்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி, ராக்கெட் லாஞ்சர்கள் என ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக இந்த பயிற்சி முகாம் செயல்படாத நிலையில், அங்கு ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்தது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments