Wednesday, May 1, 2024
Homeஇலங்கை செய்திகள்நேற்றிரவு முதல் குறைக்கப்பட்ட எர்பொருட்களின் விலை !

நேற்றிரவு முதல் குறைக்கப்பட்ட எர்பொருட்களின் விலை !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்றிரவு (30-04-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்தின் காரணமாக 333 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்தின் காரணமாக விலை 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்தின் காரணமாக விலை 310 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாவாக இருந்த நிலையில், திருத்தம் காரணமாக புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

எனினும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments