Monday, May 6, 2024
Homeஇந்திய செய்திகள்பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் இணைந்து யாத்திரை மேற்கொண்ட அகிலேஷ், மாயாவதி…

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் இணைந்து யாத்திரை மேற்கொண்ட அகிலேஷ், மாயாவதி…

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது டெல்லியை அடைந்ததது.

இந்த பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்தகட்ட பயணம் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது.

இந்த பயணத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ராகுல் காந்தி திட்டமிட்டு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் தனது பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்க விரும்புவதாக கூறினார்.

செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:- “அன்பும் எதிர்ப்பும் எதிர் எதிர் துருவங்கள். பலரும் அன்பை பரப்பதான் விரும்புவார்கள். அகிலேஷ் யாதவும், மாயாவதியும் வெறுப்பை விரும்பாதவர்கள்.

எனவே, எங்கள் யாத்திரையில் அன்பான இந்தியாவை விரும்புபவர்கள் யார் வேண்டுமானலும் இணையலாம்.அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் உத்தரப் பிரதேசத்தில் வலுவாக உள்ளது. ஆனால், பீகார், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அந்த கட்சியால் தாக்கம் செலுத்த முடியாது. காங்கிரஸ் போன்ற கட்சியால் மட்டுமே தேசிய அளவில் செயல்பட முடியும். எனவே, எதிர்க்கட்சிகளை மதிப்புடன் ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது பரஸ்பர மதிப்புடன் மேற்கொள்ளும் செயல்.இந்த யாத்திரையில் சாதாரண எளிய மக்களை சந்தித்து பேச விரும்புகிறேன்.

அப்படி இருக்க புல்லட் பாதுகாப்பு காரில் எப்படி செல்ல முடியும். இந்த நடைபயணத்தை புல்லட் ப்ரூஃப் வாகனத்தில் மேற்கொள்ள முடியாது” என்றார்.கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்.பி கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments