Friday, May 3, 2024
Homeஇந்திய செய்திகள்பார்கள் மூடும் நேரம் நீட்டிப்பு செய்ய வேண்டும்… அரசுக்கு மனு.

பார்கள் மூடும் நேரம் நீட்டிப்பு செய்ய வேண்டும்… அரசுக்கு மனு.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்திவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், தனியாக செல்பவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைபடுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments