Monday, May 6, 2024
Homeஇந்திய செய்திகள்பிரதமர் மோடியுடனான கலந்தாய்வு... பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..! 

பிரதமர் மோடியுடனான கலந்தாய்வு… பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..! 

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மதியம் ஒன்றரை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி டெல்லி கிருஷி பவனில், சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன், திமுக எம்.பி கவுதம் சிகாமணி, ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் சிலைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு விலக்கு, விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பான கோரிக்கைகளை முன்வைத்தோம். அது தொடர்பாக அவர் சில விளக்கங்கள் கொடுத்தார். அதை கேட்டு நீட் விலக்குதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைபாடு. அதற்கான சட்டப்போராட்டத்தை தொடர்வோம்” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments