Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்பூச்சிகலே பூச்சிக்கொல்லியாக மாறிய புதிய தொழில் நுட்பம் !!காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விளக்கம்.

பூச்சிகலே பூச்சிக்கொல்லியாக மாறிய புதிய தொழில் நுட்பம் !!காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விளக்கம்.

காஞ்சிபுரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை அழித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

காஞ்சியில் பூச்சிகளையே பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தும் டெக்னிக் விளக்கிய வேளாண் அதிகாரி காஞ்சிபுரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை அழித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் வேளாண் அதிகாரிகள்.

என்ன பூச்சிகள் நமக்கு நன்மை செய்யும் என்று ஆயிரம் கேள்விகளுடன் காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவனை சந்தித்தோம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு பொருமையாகவும் புரியும் படியாகவும் விளக்கத் தொடங்கினார் இளங்கோவன்,  பூச்சிகள் இருந்தால் தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான உணவு கிடைக்கும் என பூச்சிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சிக்கிறோம். பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை விளைவிக்கும் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன.

பொதுப்புத்தியில் பூச்சிகள் என்றால் அருவருப்பானவை என்றும், அவற்றால் நோய் தொற்று ஏற்படும் என்ற சிந்தனை இருப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளையும் நாம் அழிக்கிறோம். பயிர்களை தாக்கும் நோயை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார். அதற்கு மாற்றாக உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மூலம் அதாவது புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் பூச்சிகளை வைத்தே பூச்சிகளை அழித்து ரசாயன கலப்பில்லாத உணவுகள் உற்பத்தி செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.

இந்த நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வதற்காக காஞ்சிபுரத்தில் உயிரியல் கட்டுப்பாடு காரணி உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த உயிரியல் கட்டுப்பாட்டு மையத்தில் பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் நன்மை செய்யும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்,என்.பி.வைரஸ், பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சி என்னும் கிரைசோபெர்லா கார்னியா ,சூடோமோனாஸ் ஃப்ளூரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி,பெவேரியா பேசியானா போன்றவை தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் நன்மை செய்யும் பூச்சிகளை செங்கல்பட்டு காஞ்சிபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், கடலூர், தென்காசி மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக பூச்சி முட்டைகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் பயன்பாடு மற்றும் நன்மைகளை விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் தெரிந்துக்கொண்டு இவற்றை அங்கேயே வாங்கிக்கொள்ளவும் முடியும். இவற்றை விளைநிலங்களில் பயன்படுத்துவதன் மூலம் ரசாயனம் இல்லாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதுவே எங்கள் நோக்கம் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி இந்த மையத்தில் இனப்பெருக்கும் செய்யப்படுகிறது மற்றும் அவற்றை எப்படி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து நம்மிடம் விளக்கினார் வேளாண் அதிகாரி ரெஹினா. நஞ்சில்லா தமிழகத்தை உருவாக்க சத்தமில்லாமல் வேலை செய்யும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் முயற்சிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து அவர்களிடம் இருந்து விடைபெற்றோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments