Saturday, May 4, 2024
Homeஇந்திய செய்திகள்பொங்கல் பண்டிகை விற்பனைக்காக குவிந்த வண்ணம் தீட்டப்பட்ட மண் பானைகள்..

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக குவிந்த வண்ணம் தீட்டப்பட்ட மண் பானைகள்..

தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் விவசாயம் செழிக்க உதவி புரிந்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுப்பானையில்பொங்கலிட்டு வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். பொங்கல் பண்டிகைக்கு சூரிய கடவுளை நோக்கி காய்கறிகள், கரும்புகளை படையலிட்டு பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. இன்னும் அதன் தொடர்ச்சியாக பொங்கலன்று புதுப்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட சூழலில் மார்க்கெட்டுகளில் புதுப்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் அந்ததந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. நாளை பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் மதுரை ஆரப்பாளையத்தில் மண் பானை, மண் அடுப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வண்ணங்களால்அலங்கரிக்கப்பட்ட மண் பானைகள், பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளன.மண்பானை விற்பனை குறித்து பேசிய விற்பனையாளர், ‘முன்பு மண்பானைகள் ஆரப்பாளையத்திலேயே தயார் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஆரப்பாளையத்தில் தயார் செய்யப்படுவதில்லை. ஆரப்பாளையத்தில் மக்கள் நெருக்கம் அதிகமானதாலும், மண் அள்ளுவதற்கான நீர் நிலைகள் இல்லாததாலும் கிராமப் பகுதிகளில் செய்யப்பட்டு விற்பனைக்காக வருகிறது. கால் பிடி அளவுள்ள பானையை 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இந்த பானைகளை வெளியே விலைக்கு வாங்கி வந்துதான் நாங்கள் விற்கிறோம். வண்ணம்தீட்டப்பட்ட அரைப் பிடி பானையை 250 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments