Tuesday, May 14, 2024
Homeஇந்திய செய்திகள்மலைவாழ் பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல கார் வழங்கிய கோவை கல்லூரி மாணவர்கள்..!

மலைவாழ் பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல கார் வழங்கிய கோவை கல்லூரி மாணவர்கள்..!

கோவையில் மலைவாழ் பகுதியில் வாழும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக தனியார் தொண்டு நிறுவனம் கார் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைக்கிராமத்தில் மலைக்கிராம குழந்தைகள் படிப்பதற்காக தனியார் அறக்கட்டளையால் இயக்கப்படும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து சேர போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை.

இதனால் ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இந்த பள்ளிக்கு கார் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்த வாகனம் தினமும் காலை மற்றும் மாலையில் மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments