Thursday, May 9, 2024
Homeஆன்மீகம்மார்கழி மாத சிறப்பு பிரதோஷ நாளை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிறப்பு பூஜை ….திரளான...

மார்கழி மாத சிறப்பு பிரதோஷ நாளை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிறப்பு பூஜை ….திரளான பக்தர்கள் பங்கேற்பு..

தஞ்சை பெரிய கோயிலில் மார்கழி மாத பிரதோஷம் நடைபெற்றது.

மார்கழி மாத பிரதோஷம் :

சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். புதன் பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை.

இந்தநாளில் வரும் பிரதோஷ தினம் வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் திசை – புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும்.

படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள். அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.

பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.

இதையும் படிங்க : தஞ்சையில் நைட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்.. வீட்டின் கதவை உடைக்க முடியாததால் சிசிடிவி கேமராவை உடைத்து அட்டூழியம்

பெரிய கோயிலில் பிரதோஷம் :

அதன்படி உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் நேற்று நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதைப்போல் மார்கழி மாதத்தின் இரண்டாம் பிரதேசமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, கரும்புச்சாறு, அரிசிமாவு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரு நந்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பிரதோஷத்தில் கலந்து கொண்டு பெரிய நாயகி அம்மனையும் வழிப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments