Monday, May 6, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு.

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு.

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில் தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.

இதன்போது குறித்த படகு தொடர்பில் கருத்து தெரிவித்ததுடன் அந்த படகானது பலமடங்கு செலவுகளை குறைக்கும் என அமைச்சர் சுட்டிக் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments