Tuesday, April 30, 2024
Homeஇந்திய செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயல்வதில் மகிழ்ச்சி- பரூக் அப்துல்லா...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயல்வதில் மகிழ்ச்சி- பரூக் அப்துல்லா…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராக கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிற்கு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க செய்து வரும் முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதன் பின்னர் யார் இந்த நாட்டை வழிநடத்த சிறந்தவரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ஆவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது? என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments