Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்மூதூர் பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை!!

மூதூர் பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை!!

திருக்கோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments