Friday, May 10, 2024
Homeவாழ்வியல்மையோனைஸ் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!!.மையோனைஸ் சாப்பிடுவதால் வரும் பிரச்சனை….

மையோனைஸ் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!!.மையோனைஸ் சாப்பிடுவதால் வரும் பிரச்சனை….

சாட் கடைகள், சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் என மயோனைஸ் இல்லை என்றால் அது உப்பில்லா உணவு போன்றது. அதன் தனிச்சுவைக்காகவே பலரும் மயோனைஸை நாடுவார்கள். அதை தயாரிப்பதும் எளிது என்பதால் வீட்டிலேயேவும் பலர் மயோனைஸை செய்து வைத்துக்கொள்கின்ற.மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும். அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப் பொருள்.ஆய்வுகள் மூலம் அறியப்பட்டதில் இதை சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்கப்படவில்லை எனில் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடுமாம். கடைகளில் விற்கப்படுவதில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் எண்ணெய் பயன்படுத்தப்படுவது அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை கண்ணுக்கே தெரியாமல் அதிகரித்துவிடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மயோனைஸ் எதிரி எனலாம்.இதற்கு மாற்று வழி என்றால் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸும் கிடைக்கின்றன. ஆனால் அது சுவை சற்று குறைவாக இருக்கும். இருந்தாலும் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது ஏற்றது. இருப்பினும் இதுவும் ஆபத்துதான் என்றே எச்சரிக்கின்றனர். எனவே ஆரோக்கியமான வாழ்க்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments