Sunday, May 5, 2024
Homeஇலங்கை செய்திகள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை பிரஜைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு இலங்கை பிரஜைகளும் அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முருகன் (ஸ்ரீஹரன்), ராபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 4 இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நால்வரும் தற்போது திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது.

எனினும், அவர்களை நாடு கடத்துவதற்கான காலக்கெடு அல்லது குறிப்பிட்ட தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விடுதலை மற்றும் நாடு கடத்தல் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சினால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments