Monday, May 6, 2024
Homeயாழ்ப்பாணம்வங்காள விரிகுடா கடல் பகுதியில் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள மொக்கா புயல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள மொக்கா புயல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மொக்கா’ புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக இலங்கையில் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு வங்கக் கடலில் வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு நாளை (14-05-2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புயல் மணிக்கு 150 – 175 கிமீ வேகத்தில் வீசும் எனவும், வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழும்பக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியின் தாக்கம் காரணமாக நாட்டிம் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments