Thursday, May 2, 2024
Homeஇலங்கை செய்திகள்வடக்கில் இன்று முதல் இடம்பெறபோகும் வானிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வடக்கில் இன்று முதல் இடம்பெறபோகும் வானிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வடகீழ் பருவக்காற்று வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுகளும் இணைந்து இருப்பதால் பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை இணைந்து இன்று முதல் 4ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நா பிரதீபராசா ​​இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 4 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிலையில், ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலைதான் மழையை கொடுத்துள்ளது.

வடக்கு நோக்கி நகரும் ஒரு காற்றழுத்த தாழ்வு எங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு விவசாய நிலங்களின் நீர்ப்பாசன இடங்களுக்கு பருவமழையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்மானிக்கும் சக்தி உள்ளது. எனவே மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் யாழ்.மாவட்டத்தில் சரியான மழையின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை பெய்ய வேண்டும். மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, ஆனால் பல்வேறு காரணங்களால், வளிமண்டல நிலை சீரற்றதாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments