Tuesday, May 7, 2024
Homeஇந்திய செய்திகள்வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு திட்டமிட்ட படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது

வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு திட்டமிட்ட படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது

2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ல் பாலமேட்டிலும், ஜனவரி 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக போட்டிகள் நடைபெறுகிறது.
கடநத 2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால் அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

உச்சநீதிமன்றம் தடை
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தப்பட்ட தடை விதிக் கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின் கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.

இளைஞர்கள் போராட்டம்
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தை பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொந்தளித்தனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன

பீட்டா அமைப்பு போராட்டம்
இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட தமிழர் விரோத அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இம்மனுக்கள் மீது கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டினார். இவ்வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

பரபர விசாரணை
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி
வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வரும் 2023ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தமிழக அரசு உறுதியாக கூறியுள்ளது. இதனை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 16ல் பாலமேட்டிலும், ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments