Monday, April 29, 2024
Homeஉலக செய்திகள்வெளிநாட்டு தேக்கு… விற்ப் பனைக்காக கப்பலில் வந்திறங்கும் தேக்கு மரங்கள்..

வெளிநாட்டு தேக்கு… விற்ப் பனைக்காக கப்பலில் வந்திறங்கும் தேக்கு மரங்கள்..

தென்காசி மாவட்டத்தில் உள்ள மர வியாபாரிகள் இங்கு மரங்கள் வெட்ட தடை உள்ளதால் இந்தோனேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தேக்கு உள்ளிட்ட மரங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்திரா காந்தி 1975 ல், வனத்தை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பேனிகாக்கும் வகையில் மரங்கள் வெட்ட தடை உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தின் நடைமுறை படுத்தினார். இதன் எதிரொலியாகமரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டது.

இருப்பினும் கேரளாவில் இருந்து கள்ளச்சந்தை மூலம் தமிழகத்திற்குமரங்கள் வந்து கொண்டு இருந்தது. தற்போது கேரளா அரசின் கெடுபிடியான நடவடிக்கையால் அதுவும் நின்று போக மர வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து மரங்களை இறக்குமதி செய்கின்றனர் தொடங்கியுள்ளனர். போதிய மரங்கள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால் வெளிநாட்டிலிருந்து வாங்குகின்றனர் என்று கூறுகின்றனர்.

மர வியாபாரிகள் இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வேங்கை, தேக்கு ஆகிய மரங்களை இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் தூத்துக்குடிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கிறது. தூத்துக்குடியில் இருந்து சுற்றியுள்ள பகுதியில் மர வியாபாரிகள் தேக்கு வேங்கை போன்ற மரங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments