Monday, April 29, 2024
Homeஉலக செய்திகள்25 கிலோமீட்டரை 25நிமிடங்களில் கடந்த டிரோன் மருந்துகளை எடுத்துச் செல்ல மேகாலயாவில் நடந்த சம்பவம்!

25 கிலோமீட்டரை 25நிமிடங்களில் கடந்த டிரோன் மருந்துகளை எடுத்துச் செல்ல மேகாலயாவில் நடந்த சம்பவம்!

மேகாலயாவில் நாங்ஸ்டோயினில் இருந்து மாவெயிட் ஆரம்ப சுகாதார நிலையம் வரை 25 நிமிடங்களுக்குள் 25 கிமீ தூரத்தை கடக்க தொடங்கினோம்,
நாட்டிலேயே முதன்முறையாக, மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்தில், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகளை வழங்குவதற்காக ஆளில்லா விமானம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது என்று முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் மனிதர்கள் இடையே நோய்கள் பரவாமல் இருப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தும் முறை தொடங்கியது. ஆனால் நீண்ட தூரத்திற்கு டிரோன்கள் மூலம் அனுப்ப முடியாது. குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. அப்படி அதிக தூரம் பயணித்தாலும் நீண்ட நேரம் பிடிக்கும். அதை மாற்றி சுமார் 25 கிலோமீட்டர் மலைகளின் ஊடே செல்லக்கூடிய ட்ரோன் டெலிவரி சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் காசி, ஜெயந்தியா, காரோ என்று மூன்று மலைகளால் அமைந்துள்ளதால் மலைகள் வழியாக மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல கால தாமதம் ஆகும். இதை குறைக்க அம்மாநில அரசு ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்தது. அதன்படி சென்ற வாரம் சோதனை நடத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments