Thursday, May 9, 2024
Homeவிளையாட்டு5 மாதங்களுக்குப் பிறகு.. மீண்டும் இந்திய ஜெர்சியில் ஜடேஜா.. காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக உருக்கம்..!

5 மாதங்களுக்குப் பிறகு.. மீண்டும் இந்திய ஜெர்சியில் ஜடேஜா.. காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக உருக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஜடேஜா, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு வரும் 9ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார். ஜடேஜா இணைந்துள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது.

இதுகுறித்து ஜடேஜா பிசிசிஐ டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அதற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் தேவைப்பட்டது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என யோசித்தேன்.

ஆனால், உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் உலகக் கோப்பைக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆகவே, நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நான் கடினமாக உணர்ந்தேன்” என்று விவரித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments