Saturday, April 27, 2024
Homeஉலக செய்திகள்900 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் நிர்வாண படப்பிடிப்பு: இன்ஸ்டா வீடியோ ஆசை விபரீதமானது!

900 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் நிர்வாண படப்பிடிப்பு: இன்ஸ்டா வீடியோ ஆசை விபரீதமானது!

இத்தாலியின் பழமையான அமல்ஃபி தேவாலயத்தின் படிகளில் சுற்றுலாப் பயணியான யுவதி ஒருவர், இன்ஸ்டகிராம் வீடியோவிற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சிக்கிக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்தது. தேவாலயத்தின் கதவுகளுக்கு முன்னால், படிகளில் ஒரு பெண் துணியால் செய்யப்பட்ட ஒரு சிவப்பு முக்காடுடன் போஸ் கொடுத்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் திகைத்து ஆத்திரமடைந்தனர். அவர்கள் தேவாலயத்தின் அடியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தை வீடியோ எடுத்ததுடன், பொலிசாருக்கும்

அந்த நேரத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், அவர்கள் போட்டோஷூட்டிற்கு முன் அனுமதி பெறவில்லை என்றும், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறும்போது பிடிபட்டதாகவும் வீடியோவை வெளியிட்ட உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த பெண் முழு ஆடையுடன் தேவாலயத்திற்கு வந்து தனது ஆடைகளை களைந்து படிகளில் ஏற ஆரம்பித்ததை வீடியோ காட்டுகிறது.

ஒரு ஆண் புகைப்படக் கலைஞர், ஒரு மொடல் மற்றும் உதவியாளர் உட்பட மூவரும் பிரித்தானியர்கள் என்று அமல்ஃபி பொலிசார் தெரிவித்தனர்.

28 வயதான கனேடியரான சவான்னா கிராஸ் என்ற யுவதியே இவ்வாறு அரை நிர்வாண போஸ் கொடுத்தவர். அவரது நண்பியான 29 வயதான ஜெம்மா ஹாப்சன் படப்பிடிப்பிற்கு உதவியுள்ளார். அவர் பிரித்தானியர். மேற்கு யார்க்ஷயர் காவல்துறையில் பணிபுரிகிறார்.

இது விளம்பரத்திற்காக செய்யப்படவில்லையென்ன்றும், நகரத்திற்கு வந்த தங்கள் பயணத்தை நினைவூட்ட புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியதாக அந்த அறிக்கை கூறியது.

இதையடுத்து, மூவர் மீதும் “பொது இடத்தில் ஆபாசமான செயல்கள்” செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தேவாலயம் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் உள்ளது. அப்போஸ்தலர் புனித ஆண்ட்ரூவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன் கதவுகள் 1067 இல் அப்போதைய கான்ஸ்டான்டினோப்பிளில் (ரோமானியப் பேரரசின் தலைநகரம்) போடப்பட்டன. 1206 ஆம் ஆண்டு முதல் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புனித ஆண்ட்ரூவின் சிலையின் அடியில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments