Tuesday, May 7, 2024
Homeதொழில்நுட்பம்கோவையில் அறிமுகப் படுத்தப்பட்ட செயலி… தண்ணீர் தொட்டியை இயக்க புதிய தொழில் நுட்பம்..

கோவையில் அறிமுகப் படுத்தப்பட்ட செயலி… தண்ணீர் தொட்டியை இயக்க புதிய தொழில் நுட்பம்..

செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டியை இயக்கும் புதிய முறை,கோவையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கோவை அரசூரில் ஆப் தொழில்நுட்பம் மூலம் இயக்கும் தண்ணீர் தொட்டி இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்து கொண்டே வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது.
இதனை செல்போன் செயலி மூலம் இயக்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் கருவியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.இதன் மூலம் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம், தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் உள்ளிட்டவை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த செயலி கணினி மூலமாகவும் இயக்கக்கூடிய அளவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக கோவை மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இதனை அமைச்சர்,பெரிய கருப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.கோவையில் விவசாயிகளுக்கான வேளாண் கண்காட்சி அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மற்றும் விவசாயத்திற்கு செயலி மூலம் செயல்படும் மோட்டார் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments