Wednesday, May 15, 2024
Homeஇந்திய செய்திகள்தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை...இன்றைய விலை என்ன தெரியுமா?

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை…இன்றைய விலை என்ன தெரியுமா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இந்த மாத துவக்கத்தில் இருந்து 2360 ரூபாய் குறைந்தது.

இந்த மாதத்தில் இல்லாத அளவு நேற்று ஒரு கிராம் ரூ. 5572 என விற்பனையான தங்கம் விலை, இன்று மேலும் குறைந்துள்ளது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9 குறைந்து இன்று 5,563 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 72 ரூபாய் வரை குறைந்து 44,504 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து 69.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments