Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்நிலநடுக்கத்தின் போது மருத்துவ மனையில் இருந்த பச்சிளங் குழந்தைகளை காத்த செவிலியர்கள்.. தன் உயிரையும் பொருட்படுத்தாது...

நிலநடுக்கத்தின் போது மருத்துவ மனையில் இருந்த பச்சிளங் குழந்தைகளை காத்த செவிலியர்கள்.. தன் உயிரையும் பொருட்படுத்தாது குழந்தைகளை காத்த நெகிழ்வான சம்பவம் ..

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துருக்கி-சிரியா எல்லையில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 29,000ஐ தாண்டியுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெருமளவில் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டுள்ளன.

துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,ஆயிரக்கணக்கானோர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாள்கள் கடந்த நிலையில், இது தொடர்பான நெகிழ்ச்சியான செய்திகள் பல வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படித்தான் இரு செவியர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நிலநடுக்கத்தின் மையமாக இருந்த காசியன்டெப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் பல ஐசியூ அறையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தன. சம்பவ தினமான பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நிலநடுங்கி குலுங்கிய நிலையில், அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர்களான டேவ்லெட் நிசாம் மற்றும் கஸ்வல் கலிஸ்கான் ஆகியோர் அந்த அறைக்கு ஓடிவந்து குழந்தைகளின் இன்குபேடர் நில அதிர்ச்சியில் ஆடாமல் இருக்க பிடித்துக்கொண்டு நின்றனர்.

இவருவரும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து குழந்தைகளை காக்கும் இந்த வீடியோவை துருக்கியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஃபத்மா சாஹின் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பார்வையாளர்கள் பலரும் செவிலியர்களின் செயலை பாராட்டி லைக் மற்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments