சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் சரண்யா மோகன் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.
காதல் மற்றும் குடும்பத்தை மையமாக வைத்து எமோஷனல் படமாக வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. பாடல்களும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமும் வெளியாகி தமிழ் சினிமாவில் வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது படத்தில் நடித்த நடிகர் மரணம் அடைந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதற்கு முன், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் பல செய்திகள் வந்தன.