Friday, May 10, 2024
Homeதொழில்நுட்பம்பொருட்களை தொடாமல் அசைக்க முடியும்..எப்படி தெரியுமா? அசைத்துக் காட்டும் ஒலி!

பொருட்களை தொடாமல் அசைக்க முடியும்..எப்படி தெரியுமா? அசைத்துக் காட்டும் ஒலி!

ஒரு பொருளை தொடாமல் அதை அப்படியும், இப்படியும் அசைக்க முடியுமா? கேட்பதற்கு மாயாஜாலம் போலத் தோன்றும் இந்தக் காரியத்தை, தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கி உள்ளனர், அமெரிக்காவிலுள்ள மின்னசோடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அசைக்கப்பட வேண்டிய பொருளின் மீது ஒரு சிறப்புப் பட்டை அல்லது பூச்சு ஒன்றை பூச வேண்டும். பிறகு அந்தப் பரப்பின் மீது, சற்று தொலைவிலிருந்து ‘அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் மீயொலி அலைகளை செலுத்தினால், அலையின் ஆற்றலை கூட்டிக் குறைப்பதன் மூலம் அந்தப் பொருளை முன்னும், பின்னுமாக நகர்த்த முடியும்.

முன்பு மிகச் சிறிய பொருட்களையே இது போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் அதிர வைக்கவும், அசைக்கவும் முடிந்தது. ஆனால், மின்னசோடா ஆராய்ச்சியாளர்கள், ஒரு பொருளின் மீது மீயொலி வாங்கும் பட்டைகளை பொருத்தியதன் மூலம், சற்று பெரிய பொருட்களை, விரும்பிய திசையில் துல்லியமாக அசைக்கும் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

‘ரோபோ’க்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொருட்களை கையாளுதல் போன்றவற்றுக்கு இந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments