Saturday, May 4, 2024
Homeவிளையாட்டுசாதிப்பரா ஹர்திக் பாண்டியா * இந்தியா-இலங்கை 'டி-20' தொடரின் தொடக்க விழா

சாதிப்பரா ஹர்திக் பாண்டியா * இந்தியா-இலங்கை ‘டி-20’ தொடரின் தொடக்க விழா

மும்பை: ரோகித், கோஹ்லி, ராகுல் என மூன்று முன்னணி வீரர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய ‘டி–20’ அணி களமிறங்குகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் மோதலில் சாதித்து தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியின் ‘பிக்–3’ எனப்படும் ரோகித், கோஹ்லி, ராகுல் என மூவருக்கும் இதில் வாய்ப்பு தரப்படவில்லை.

கடந்த ஆண்டு அதிக ‘டி–20’ போட்டிகளில் பங்கேற்ற இந்தியா, 9 தொடரில் 8ல் வென்றது. ஆனால் ஆசிய கோப்பை, உலக கோப்பை தொடரில் கோட்டை விட்டது.

இதனால் 2024 ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை, ‘பிக்–3’ வீரர்கள் இல்லாமல் தயார் செய்ய நினைக்கிறது நிர்வாகம். இதனால் ஹர்திக் பாண்ட்யா ‘டி–20’ அணிக்கு முழுநேர கேப்டன் ஆகியுள்ளார். இந்த ஆண்டு 15க்கும் குறைவான ‘டி–20’ல் மட்டும் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில் கேப்டன் பணியில் திறமை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.

புதிய துவக்கம்

இந்திய அணிக்கு இளம் வீரர்கள் இஷான் கிஷான், ருதுராஜ் ஜோடி துவக்கம் தரலாம். சுப்மன் கில்லும் போட்டியில் உள்ளார். ‘மிடில் ஆர்டரில்’ அனுபவ சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இடம் பெறுவர். விக்கெட் கீப்பர் இடத்தில் சஞ்சு சாம்சன் முந்துகிறார்.

பவுலிங் எப்படி

பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக் உள்ளனர். ‘ஆல் ரவுண்டர்’ அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருடன், சுழலில் சகால் சேர்க்கப்படலாம்.

இலங்கை பலம்

‘ஆசிய சாம்பியன்’ இலங்கை அணி, கேப்டன் ஷனாகாவுக்கு அவிஷ்கா, சமிகா, சதீரா என உள்ளூர் தொடரில் மிரட்டிய வீரர்கள் பலம் சேர்க்க உள்ளனர். தவிர கருணாரத்னே, துணைக் கேப்டன் ஹசரங்கா, குசல் மெண்டிஸ், அசலங்காவும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

அட்டவணை

தேதி போட்டி இடம்

இன்று முதல் ‘டி–20’ மும்பை

ஜன. 5 2வது ‘டி–20’ புனே

ஜன. 7 3வது ‘டி–20’ ராஜ்கோட்

ஜன. 10 முதல் ஒருநாள் கவுகாத்தி

ஜன. 12 2வது ஒருநாள் கோல்கட்டா

ஜன. 15 3வது ஒருநாள் திருவனந்தபுரம்

  • ‘டி–20’ போட்டி இரவு 7:00 மணி, ஒருநாள் போட்டி மதியம் 1:30 மணிக்கு துவங்கும்.

17

இந்தியா, இலங்கை அணிகள் 26 ‘டி–20’ போட்டிகளில் மோதின. இந்தியா 17ல் வெற்றி பெற்றது. 8ல் இலங்கை வென்றது. 1 போட்டிக்கு முடிவில்லை.

  • கடைசியாக மோதிய 4 போட்டிகளிலும் இந்தியா 3, இலங்கை 1 போட்டியில் வென்றன.

மழை வருமா

முதல் ‘டி–20’ போட்டி நடக்கவுள்ள மும்பையில் வானம் தெளிவாக காணப்படும். போட்டி நேரத்தில் மழை வர வாய்ப்பில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments