Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியவில்ல….. வறுமையில் வாடும் தென்காசி நெசவாளர்கள்.

அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியவில்ல….. வறுமையில் வாடும் தென்காசி நெசவாளர்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரம் குடும்பத்திற்கு மேல் நெசவு தொழிலையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பணம் மதிப்பிழப்பிற்கு பிறகு விசைத்தறி தொழில் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிவுக்கு ஜிஎஸ்டி வரி போட்டதன் விளைவாக இந்த தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது.விசைத்தறி தொழிலாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது அவர் கூறியவர், நான் இருபது வருடமாக விசைத்தறியில் நெசவு செய்து வருகின்றேன். நூல் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. 1200 ரூபாய் இருந்த ஒரு நூல் கட்டின் விலை தற்போது 2500 முதல் 2600 வரை அதிகரித்து உள்ளது.நூலின் விலை அதிகரித்துள்ளதால் விசைத்தறி உரிமையாளர்களால் நூலை வாங்கி தொழிலாளர்களுக்கு கொடுக்க இயலவில்லை. இதன் மூலமாக தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகின்றது. அத்தனை நாட்களுக்கு மட்டுமே நூல் அவர்களுக்கு கிடைக்கின்றது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நலிவடைந்து வரும் தொழில்களில் விசைத்தறியும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இலவசமாக 750 யூனிட் மின்சாரம் தமிழக அரசால் வழங்கப்படும். 750 யூனிட்டுக்கு மேல் வரும் மின்சாரத்தின் விலை அதிகரித்து உள்ளது அதனால் சிறு குறு தொழில் செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அரசாங்கத்திற்கு முறையாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாக இருக்கிறது என்று விசைத்தறி தொழிலாளர் மாணிக்கம் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments