Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கடல் பசு…ராமநாதபுரம் அருகே நடந்த சம்பவம்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கடல் பசு…ராமநாதபுரம் அருகே நடந்த சம்பவம்.

ராமநாதபுரம் மாவட்டம் வில்லூண்டி கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இறந்த நிலையில் 250 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு கரை ஒதுங்கியது. அதனை வனத்துறையினர் மீட்டு மண்ணில் புதைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, கடல் குதிரை, பவளத்திட்டுகள், கடல் பாசிகள், கடல் சங்குகள் உள்ளிட்ட 2,000-க்கு மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடந்த சில மாதங்களாக இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது. மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிருடன் இருந்தால் கடலுக்குள் விடப்படுகிறது. இறந்துவிட்டால் வனத்துறையினரின் மூலம் நிலத்தில் புதைக்கப்படுகிறது.

இதையடுத்து, இன்று ராமேஸ்வரம் அடுத்துள்ள வில்லூண்டி கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் 250 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்துவிட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

பின்பு அங்கு வந்த வனத்துறையினர் மருத்துவரின் உதவியுடன் கடல் பசுவை பரிசோதனை செய்து கடற்கரை ஓரத்தில் புதைத்தனர். மேலும் கடல் பசு பெரிய விசைப்படகுகள், கப்பல்கள் அல்லது பாறைகளில் மோதி காயமடைந்து இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என வனத்துறை தெரிவித்தனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments