Wednesday, May 1, 2024
Homeஇந்திய செய்திகள்அடுத்த மாதம் களமிறங்கும் ஆவினின் புதிய பால் வகை ...!

அடுத்த மாதம் களமிறங்கும் ஆவினின் புதிய பால் வகை …!

பால் தட்டுப்பாட்டை போக்க மார்ச் 1 ஆம் தேதி முதல் Cow Milk என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஆவின் நிறுவனம் அந்த பாலின் கொழுப்பு அளவை 3.5 சதவிகிதமாக குறைத்து உற்பத்தி செய்யவுள்ளது. ஒரு லிட்டர் பால் 22.50 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

பால் தட்டுப்பாடு காரணமாக பச்சை நிற பாக்கெட்டுகளை குறைக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பச்சை நிற பாக்கெட்டுகளில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும் நிலையில் தட்டுப்பாடுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் குறைவால் ஆவின் பால் தட்டுப்பாடு என தொடர் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments