Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திஅரவிந்த் கெஜ்ரிவால் கூறிய அசத்தலான உவமை….நாங்க காளையிடமே பால் கறந்தவங்க.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய அசத்தலான உவமை….நாங்க காளையிடமே பால் கறந்தவங்க.

அகமதாபாத்: பசுவிடம் யார் வேண்டும் என்றாலும் பால் கறக்க முடியும் என்றும்.. ஆனால் நாங்கள் எருதுவிடம் பால் கறந்துள்ளோம்.. வரும் 2027 ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தக் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அங்கு, 5 தொகுதிகளில் வென்று முதல் முறையாக குஜராத்தில் தடம் பதித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

குஜராத்தில் 5 தொகுதிகளில் வெற்றி
எனினும், குஜராத்தில் 14 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும் வரும் 2027 தேர்தலில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியினர் ஆருடம் கூறி வருகின்றனர். இந்த நிலையில், குஜராத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது எவ்வளவு கடினமானது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி பெற்ற இந்த வெற்றி எருதுவிடம் பால் கறப்பதற்கு ஒப்பானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

எருதுவிடம் பால் கறந்துள்ளோம்
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: – ஒரு ஆண்டில் நாங்கள் பஞ்சாபில் ஆட்சியை பிடித்தோம். டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றோம். கோவாவில் 2 எம்.எல்.ஏக்களை வென்றோம். குஜராத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். 14 சதவீத வாக்குகள் வாங்கியிருக்கிறோம். குஜராத்தில் கிடைத்த வெற்றியை ஒருவர் மேற்கோள் காட்டி, நான் எருதுவிடம் பால் கறந்ததாக கூறினார். பசுவிடம் யார் வேண்டும் என்றாலும் பால் கறக்க முடியும் . ஆனால் நாங்கள் எருதுவிடம் பால் கறந்துள்ளோம். வரும் 2027 ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்’ என்றார்.

செயற்குழு கூட்டம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்த பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், சீனா பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார். இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது

அனைத்தும் சரியாக இருப்பதாக கூறுகிறது
எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நமது வீரர்களை தாக்கி வருகிறது. ஆனால், பாஜக அரசோ அனைத்தும் சரியாக இருப்பதாக கூறுகிறது. சீனாவை தண்டிப்பதை விட்டு விட்டு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. எல்லையில் நமது வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சீனாவிடம் இருந்து இறக்குமதியை அனுமதிக்கலாமா? சீன இறக்குமதியை நிறுத்தி அந்த நாட்டிற்கு பாடம் புகட்ட வேண்டும். இந்திய மக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

டெல்லியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளது
இரு மடங்கு விலை இருந்தாலும் உள்நாட்டு தயாரிப்பையே மக்கள் வாங்க வேண்டும். நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் உயர்ந்து வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் ஆர்வம் இல்லை. நாட்டிலேயே டெல்லியில் தான் பணவீக்கம் மிகவும் குறைவாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும், வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று ஆம் ஆத்மி அரசு மெய்பித்து காட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments