Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திஹிந்தி வேணாம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் …அதுதான் பயன் படும் _ராகுல் காந்தி பேச்சு.

ஹிந்தி வேணாம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் …அதுதான் பயன் படும் _ராகுல் காந்தி பேச்சு.

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி இப்போது ராஜஸ்தானில் ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது என்று தெரிவித்தார்.

காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்க ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகிறார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் உள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும், நாடு இப்போது பாஜக ஆட்சியில் பெரிய அபாயத்தில் உள்ள நிலையில், நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

பாத யாத்திரை
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இடையில் நடைபெற்ற இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களில் கூட பிரசாரத்திற்கு ராகுல் காந்தி செல்லவில்லை. அதைக் காட்டிலும் இந்த ஒற்றுமை பாத யாத்திரை முக்கியம் என அவர் கருதுகிறார். இதற்கு நாடு முழுக்க மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இந்த பாத யாத்திரையில் பல முக்கிய பிரபலங்களும் கூட கலந்து கொண்டு வருகின்றனர்

ராஜஸ்தான்
இப்போது ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பாத யாத்திரை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. எனவே எப்படியாவது அங்கு ஆட்சியைத் தக்க வைக்கப் பாத யாத்திரை சென்றுள்ளார். அங்குப் பெருந்திரளான மக்கள் ராகுல் காந்தி ஆதரவு அளித்து, அவரது பாத யாத்திரையில் பங்கேற்பதாக ராஜஸ்தான் காங்கிரசினர் கூறுகின்றனர்

இந்தி பயன்படாது
இதற்கிடையே இன்று ராஜஸ்தான் ஆல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது என்றும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால், இந்தி உங்களுக்குப் பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும். எனவே, அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களுடன் போட்டியிட்டு அவர்களை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஆங்கிலம்
இதற்காகவே ராஜஸ்தானில் 1,700 ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.. பள்ளிகளில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் பாஜக தலைவர்களின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குத் தான் செல்கிறார்கள். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்று, தலைசிறந்த நபர்களாக மாறுவதை அவர்கள் விரும்பவில்லை.. அவர்கள் வயல்களை விட்டு வெளியேறுவதை பாஜக விரும்பவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments