Tuesday, May 14, 2024
Homeசினிமாஅரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா - விட்லிகோ நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?...

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா – விட்லிகோ நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதிர்ச்சி தகவல்

விவாகரத்து பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துவந்த சமந்தாவை மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் வெகுவாக பாதித்துள்ளது. சமீபத்தில் யசோதா படம் தொடர்பாக அளித்த பேட்டியில், ”நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறிவருகின்றன. சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுவது கூட சிரமமாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்” என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார்.

அந்த வரிசையில் மற்றொரு நடிகையான  மம்தா மோகன்தாஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் அறிமுகமாகி தமிழில் சிவப்பதிகாரம், தடையறத் தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.

விட்லிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் மம்தா. ஆட்டோ இம்யூன் பாதிப்பால் ஏற்படும் இந்த நோயின் தாக்கம் என்பது சரும நிறத்திற்கான முக்கிய காரணியான மெலனின் படிப்படியாக குறைவதால், தோலின் நிறம் முழுவதுமாக இழக்கும் அபாயம் உருவாகும். எந்த வகை சருமம் கொண்டவரையும் இந்த நோய் தாக்கக் கூடும்.

அரிதான சரும குறைபாடு என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் விட்லிகோ பரவக்கூடியது அல்ல என்றும், நாளடைவில் சருமத்தில் உள்ள திட்டுக்கள் அதிகரிக்கும் வகையிலான Progressive Condition கொண்டது என்றே கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments