Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்ஆறுதலைத் தரும் புத்தாண்டு: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

ஆறுதலைத் தரும் புத்தாண்டு: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

இந்த வருடம் கொண்டாடப்படும் புத்தாண்டு சிறிய ஆறுதலைத் தந்துள்ளதுடன், அடுத்த வருடத்தை இதைவிட அதிர்ஷ்டமானதாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (14.04.2023) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியதை அடுத்து உதயமாகும் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டு தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பானது மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது.எல்லோரும் மகிழ்ச்சிக்காகவும், செழுமைக்காகவும் சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு உதயமானபோது நாங்கள் அனைவரும் பெரும் நெருக்கடியில் சிக்கினோம். புத்தாண்டைக் கொண்டாடுவது ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்வில் நடப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த புத்தாண்டில், இன்னும் கூடுதலான மகிழ்ச்சியையும் செழுமையையும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரே வழியில் நடந்தால் அந்த இலக்கு சாத்தியமாகும்.

இன, மத, கட்சி, நிற வேறுபாடுகளைக் களைந்து புதிய கண்ணோட்டத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இந்தப் புத்தாண்டில் உறுதியான தீர்மானத்தை எடுத்தால் இந்தப் புத்தாண்டை மட்டுமல்ல எதிர்காலத்தையும் நல்ல ஆரோக்கியமாக அமைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments