Sunday, April 28, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி ! யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி ! யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மாத்திரமே கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி சி.ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து படுதித்துதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று (12.04.20123) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த பெண்ணுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி சி.ஜமுனாநந்தா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் மற்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குறித்த பெண்ணும் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தி தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளார். போதனா வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தொற்றுநோய் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களில் முகமூடி அணிவது அவசியம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி சி.ஜமுனாநந்தா ஆலோசனை வழங்கினார்.

மருத்துவத்துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments