Saturday, May 4, 2024
Homeஇந்திய செய்திகள்இந்தியாவிலேயே சென்னை தான் முதலிடம்…மத்திய அரசு அளித்த பகீர் தகவல்!!!

இந்தியாவிலேயே சென்னை தான் முதலிடம்…மத்திய அரசு அளித்த பகீர் தகவல்!!!

சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

இதில் சென்னை பெருநகரம் முதலிடத்தில் உள்ளது. அதிவேகமாக வாகனத்தை இயக்குவதிலும் சென்னைதான் முதலிடம் என்ற வேதனைக்குரிய தகவலும் வெளியாகி இருக்கிறது. நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாகனங்களின் எண்ணிக்கைதான் உயருகிறது என்றால் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதற்கு ஈடு கொடுத்து அதிகரிப்பது கவலை அளிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது. வாகன விபத்துக்கள் அதிகரிப்புக்கு முறையாக சாலை விதிகளை பின்பற்றாததே முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை தான் முதலிடம் நாடு முழுவதும் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே விபத்துக்கள் நடக்கும் பெருநகரங்கள் பட்டியலில் சென்னைதான் முதலிடம் என்ற வேதனைக்குரிய தகவலும் வெளியாகி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2020-ம் ஆண்டிலும் சென்னை தான் கடந்த 2021 ஆம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கோவை, மதுரை போன்ற 50 பெருநகரங்களில் மட்டும் 67,301 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 15,350 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 58,758- ஆகும்.

இதில் சென்னையில் மட்டும் 5,034 விபத்துக்கள் நடந்துள்ளன. நாட்டிலேயே அதிக விபத்துக்கள் நடைபெற்ற பெருநகரம் சென்னை என்பதுதான் கவனிக்கத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டிலும் சென்னையில் தான் அதிக விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 4,389 விபத்துக்கள் நடந்தன.

உயிரிழப்பு எண்ணிக்கையில் டெல்லி சாலை விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. டெல்லியில் மட்டும் 4,720 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதில் சிக்கி 1,239- பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் விபத்துக்கள் அதிகம் நடைபெற்றாலும் உயிரிழப்பு எண்ணிக்கை டெல்லியுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.

டெல்லியில் 998- பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிவேகமாக வாகனத்தை இயக்குவதிலும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக வாகனங்களை அதிவேகமாக இயக்குவதே அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் பதிவான விபத்துகளில், 45, 942 வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை வேகமாக ஓட்டியே விபத்தில் சிக்கியிருக்கின்றனர்.

அதிவேகமாக வாகனத்தை ஒட்டி விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 4,880 பேராக உள்ளது. 33-வது இடத்தில் மதுரை அதிக விபத்துக்கள் நடைபெற்ற பெருநகரங்கள் பட்டியலில் கோவை 27 வது இடத்திலும் பலியானவர்கள் எண்ணிக்கையில் 29-வது இடத்திலும் உள்ளது.

கோவையில் மட்டும் 886 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். 234 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல், விபத்துக்கள் அதிகம் நடைபெற்ற பெருநகரங்கள் பட்டியலில் மதுரை 33-வது இடத்திலும் திருச்சி 41-வது இடத்திலும் உள்ளது. மதுரையில் 618 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 154- பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் 339- பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 130 பேர் பலியாகியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments