Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திவரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை…ஆளுநர் குறித்து சரத்குமாரின் கருத்து.

வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை…ஆளுநர் குறித்து சரத்குமாரின் கருத்து.

சென்னை: இனி எந்தவொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாடு, ‘தமிழ்நாடு’ என்றே அழைக்கப்படும் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.. அத்துடன், ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்றும் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி சமீபத்தில் பேசியிருந்தார்..

இந்தக் கருத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஹேஷ்டேக் “தமிழ்நாடு” என்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.. ஆளுநரின் பேச்சுக்கு, விசிக திருமாவளவன், சிபிஎம் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை உடனடியாக தெரிவித்திருந்தனர்.

முரசொலி திமுகவின் முரசொலியும் தன்னுடைய தலையங்கத்தில் இதுகுறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தது. அதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை.

அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கவில்லை. மாறாக, எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.

நடிகர் சரத்குமார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது: சரத்குமார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகத்தால் தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது.

முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அழுத்தம் திருத்தமாய் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

மேலும், தமிழ்நாடு பெயர் உருவாக காரணமாக அமைந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு மெரீனாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இனி எந்தவொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாடு, ‘தமிழ்நாடு’ என்றே அழைக்கப்படும். ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments